திருமருகல் அருகே சீயாத்தமங்கை ஊராட்சி கல்லுக்கேனி தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (32), தமிழக ஊர்க்காவல் படை வீரராகவும், வெல்டராகவும் பணியாற்றி வந்தார். நேற்று காலை வெல்டிங் பட்டறையில் பணிபுரியும்போது, மின் இணைப்பு கொடுக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திட்டச்சேரி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.