நாகை: மழை மாரியம்மன் கோயில் தேரோட்டம்.. கோலாகலம்

வேதாரண்யம் அருகே செட்டிப்புலம் மழை மாரியம்மன் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலம் மழை மாரியம்மன் கோவில் வைகாசிமாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அம்மன் வீதியுலா காட்சி முக்கிய வீதிகள் வழியே சிறப்பாக நடைபெற்றது. தேர் நிலையடியை அடைந்ததும் பெண்கள் பொங்கள் வைத்தும், மாவிளக்கு அர்சனைகள் செய்து நேர்த்திகடன் செய்தனர். காவடியாட்டம் , சிலம்பாட்டம் உள்ளிடவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி