வலை போட்டு மூடி வைத்திருக்கும் அவலம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்காலத்தூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள ஆழ் குழாய் நீர் தேக்க தொட்டியின் கான்கிரீட் மூடி இடிந்து விழுந்து, பச்சை வலை கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் தொட்டியில் இலை, தழைகள், பாம்பு, தவளை, புழு, பூச்சிகள் விழுந்து தண்ணீர் அசுத்தமாகிறது. இந்த அசுத்த நீரை குடித்து வருவதால் நோய் தொற்று ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி