திருக்குவளை: தண்ணீர் இல்லாமல் கருகி வரும் குறுவைப் பயிர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குளையை அடுத்த வலிவலம், சென்சாரி கோவில்பத்து, வடபாதி சுமார் 1000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெள்ளையாறு மூலம் பாசன வசதி பெரும் இப்பகுதிகள் முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்லாமல் 25 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை நேரடி விதைப்பு செய்யப்பட்ட குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் காய்ந்து வயல்கள் வெடித்து பயிர்கள் கருகி வருகிறது. 

சுமார் ஏக்கருக்கு 20,000 ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது வயல்கள் பாலம்பாலமாக வெடித்து காணப்படுகின்றன. இதனால் பயிர்கள் கருகி விவசாயிகள் செய்வதறியாத நிலையில் பொதுப்பணித்துறையின் அலட்சியம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் விவசாயிகள் கருகும் பயிரை காப்பாற்ற முடியாமல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாக ஆகட்டும் என வயலில் கால்நடைகளை மேய விட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி