மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய் பரிகார ஸ்தலமான இக்கோவிலில் ஷண்முகரை பூனை ஒன்று வெகு நேரமாக மனம் உருகி வழிபட்டதால் பக்தர்கள் மெய்சிலிர்த்து கண்டு களித்தனர். வெகு நேரமாகியும் பூனை செல்லாததால் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் அனைவரும் பார்த்துச் சென்றனர்.