நடிகரும், தவெக நிர்வாகியுமான ஜெரால்டு மில்டன், நடிகர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானால் வேளாங்கண்ணி மாதா கோவிலில் வேண்டுதல் செய்வதாக கூறியிருந்தார். தற்போது விஜய் வெற்றி பெற்று முதல்வரான நிலையில், தனது வேண்டுதலை நிறைவேற்ற ஆதரவாளர்களுடன் வேளாங்கண்ணிக்கு வருகை தந்து, உலகப்புகழ் பெற்ற ஆரோக்ய மாதா பேராலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்து விஜய் வெற்றிக்கு தீவிர பிரச்சாரம் செய்துள்ளார்.