தமிழக அரசு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. திருமருகல் ஒன்றியத்தில் 95 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது காலை முதலே புதிய சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரன் தலைமையில் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.