சிரமத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 77.4 செமீ மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. காலை முதல் பரவலாக மழை பெய்தாலும், தாழ்வான சாலைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. விடுமுறை அறிவிப்பு வராததால் மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். திருக்குவளை, வலிவலம், கொளப்பாடு, சாட்டியக்குடி, தேவூர், கச்சனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் பேருந்து மற்றும் பள்ளி வேன்களில் பள்ளிக்கு வருகை தந்தனர். மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சிலர் குடை பிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் பள்ளிக்கு வந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி