வேளாங்கண்ணி பேராலயத்தில் சிலுவை பாதை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்தப் பேராலயத்தில் கடந்த 5ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது. கிறிஸ்துவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி 2வது வாரவெள்ளியை யொட்டி சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. பேராலயத்தின் மேல்கோவிலில் இருந்து பழைய மாதாகோவில் வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. 

அப்போது ஏசுநாதரின் பாடுகளைப் பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்திக்கொண்டு ஜெபித்துக்கொண்டே சென்றனர். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் மற்றும் உதவிப் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி