பாலக்குறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பாலக்குறிச்சி வேப்பஞ்சேரி, தண்ணிலபாடி, இறையான்குடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. 

முகாமை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆணை, வருமானச் சான்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, பெயர் மாற்றம், பட்டா நகல், மகளிர் உரிமைத் தொகை போன்றவைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். 

தொடர்ந்து கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அடியில் இருந்து 2 லட்சம் மதிப்பீட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்களுக்கான பெஞ்ச் டெஸ்க் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி