நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் தேவதுர்கை அம்மன் கோவிலில், உலகிலேயே துர்கை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இங்கு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, 500 பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.