நாகை மாவட்டத்தின் திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால், குறுவை நெல் கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே வடகிழக்கு பருவமழையின் போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மழையால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.