பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு செம்மார கடை வடக்கு சந்து அந்தோனியார் கோவில் பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு காரணங்களால் கழிவுநீர் வெளியேறி சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கி நிற்பதால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் இது மேலும் மோசமடைகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி