தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கோவில்கள் அருகில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டு வந்தன. இந்நிலையில், கீழ்வேளூர் அடுத்த மூங்கில் குடி செல்லும் சாலையில் உள்ள மதுபான கடையினால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால், அப்பகுதியில் உள்ள மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.