கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 1,500 கோடி ஒதுக்கியதை எதிர்த்து, நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் எரிக்கப்பட்டதுடன், மத்திய மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.