அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகை, கீழையூர், திருமருகல் உள்ளாட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை பெண் பணியாளர்கள் பேரணியாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும், ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 100 நாள் திட்ட நிதியை வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
வேதாரண்யம்
நிதி அமைச்சர் மரிய வில்சன் பேட்டி