தமிழகத்தில் தற்சமயம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்கு கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்துவது வழக்கம். மீன்பிடித் தடைக்காலம் வருகிற 15-ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், நாகை தோணி துறைச்சாலை பகுதியில் விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.