நாகை: புதிய பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு பேரூராட்சி 11 வது வார்டு பகுதியில் பேரூராட்சி பொது நிதி ரூ. 9.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர நியாய விலை கடை கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதி நேர நியாய விலைக்கடையினை பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா தலைமையில், பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலையில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவர்கள் திறந்து வைத்தார். 

நிகழ்வில் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், செயல் அலுவலர் பொன்னுசாமி, கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கார்த்திகேயன், சூப்பிரண்டு சண்முக பிரியா மற்றும் கவுன்சிலர்கள் வெற்றிவேல், முருகேசன், நிக்சன், ஜேனட் அலெக்ஸ் சிசிலியா, சத்யா, சித்திரா, சசிரேகா, தையல்நாயகி, மற்றும் செட்டித்தெரு சுனாமி குடியிருப்பு பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி