நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், 693 பள்ளிகளில் இன்று காலை ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்களில் 68,680 மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை இன்று காலை முதல் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில், இன்று காலை மாணவ மாணவியர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.