நாகை: மாவட்ட முழுவதும் பரவலாக மிதமான மழை

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் இன்று (பிப்ரவரி 5) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது. தற்போது நாகை வெளிப்பாளையம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பனி அதிகரித்து வெயில் குறைவாக இருந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி