நாகப்பட்டினம்: மாசி மகா தீமிதி திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம், கன்னித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மாசிமக தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

தொடர்ந்து சக்தி கரகம் புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தது. பின்னர் ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்கியது. தொடர்ந்து மஞ்சள் நிற உடையணிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

அதன் பின்னர் பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். இவ்விழாவில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி