பட்டினி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் சுகுமார் தலைமை வகித்தார்.