நாகப்பட்டினத்தில் குறுவை அறுவடை நிறைவு: விவசாயிகளுக்கு ₹285 கோடி வழங்கல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,19,953 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, ரூபாய் 285 கோடியே 41 இலட்சத்து 30 ஆயிரத்து 392 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி