நாகை: 193 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் தகவல்

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்-22 உலக தண்ணீர் தின கிராமசபைக் கூட்டம், 29.03.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாடு தடுத்தல், 2030-க்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்றடைதல், கிராம ஊராட்சிகளில் 01.04.2024 முதல் 28.02.2025 வரை உள்ள காலத்தில் ஊராட்சியின் பொது நிதி செலவினம் மற்றும் படிவம் 30 குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்து அது குறித்து விவாதித்தல், 2025-26 ஆண்டிற்கான 15வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்ற வீடுகள் மறுகட்டுமான திட்டம் 2025-26-க்கான பயனாளிகள் தேர்வு நடவடிக்கை மேற்கொள்ளல், முழு எழுத்தறிவு பெற்ற கிராமஊராட்சி என்கிற இலக்கை அடைதல் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக விவாதித்து கிராம சபை கூட்டம் நடைபெறும். இக்கிராமசபா கூட்டத்தில் பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி