வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர், வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்த நிலையில், நாகை அருகே ஏர்வாடி வரதராஜன் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2025 ஜூலை 30 அன்று ரூ. 6.70 லட்சம் பெற்றுள்ளார். மார்ச் 5 அன்று சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட சந்தோஷுக்கு, விமான நிலையத்தில் விசாவை அதிகாரிகள் போலி எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.