நாகை மாவட்டம் திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரில், கீழையூர் கடைமடை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூண்டி, மகிழி, சிந்தாமணி, காரப்பிடாகை, மேலப்பிடாகை, பிஆர். புரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.