நாகை: 18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 18.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி