நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதிகளுக்கு ஆற்று நீர் வந்தது. என்றாலும் குறுவை சாகுபடி செய்த வயல்களுக்கு ஆற்று நீர் வரவில்லை என விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பொதுப்பணித்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பல பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீரை திறந்துவிட்டனர். இதையடுத்து அரிச்சந்திராநதியிலிருந்து பிரிந்து செல்லும் பல கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்வதால் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் தேவையான நீர் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தண்ணீர் திறப்பதை நிறுத்தாமலும், முறையாக திறந்து தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.