ஒன்றிய அளவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற 12 பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்கள் இறுதி போட்டியில் பங்கு பெற்றனர். இறுதிப் போட்டி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. ஆசிரியர்கள் வெங்கடேஷ், வடிவேல், சிவக்குமார், செல்வி, ஆர்த்தி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதலிடமும், காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டாமிடமும், வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், பதக்கம், புத்தகம் மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்