நாகப்பட்டினம்: டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவினால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்ட கீழையூர் மற்றும் கீழ்வேளூர் பகுதியை மேம்படுத்த வளமிகு பகுதி மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் 2024-2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில் கீழையூர் மற்றும் கீழ்வேளூர் பகுதிகளுக்கு தலா 4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில திட்டக் குழு, நாகை மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் மற்றும் கீழ்வேளூர் பகுதிகளில் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் மதிப்புக்கூட்டுப் பயிற்சி போன்ற 7 விதமான பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகின்றன. 

இதன்தொடர்ச்சியாக கீழையூர் பகுதி மக்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி ஈசனூரில் மார்ச் 13ஆம் நாள் தொடங்கி 3 நாள் நடைபெற்றது. தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் என்.சசிப்பிரியா பயிற்சியை துவக்கி வைத்து பயிற்சிக் கருவிப் பெட்டியை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி