கீழ்வேளூர்: குடிசை வீடு எரிந்து நாசம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூர் பெரிய தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி நாகம்மாள். இவர் தனது வீட்டின் மாடியில் கீற்று கூரை வீடு அமைத்து வசித்து வருகிறார். நேற்று (மார்ச் 22) திடீரென அந்த வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்தது. பின்னர் தீ வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்தினால் சுமார் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

தொடர்புடைய செய்தி