கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து குறுவை பருவத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் 5809.71 ஹெக்டர் பயிர் ரூ.309.65 இலட்சம் மதிப்பிலும், 2022-23 ஆம் ஆண்டில் 8656.94 ஹெக்டர் பயிர் ரூ.149.478 இலட்சம் மதிப்பிலும், 2023-24 ஆம் ஆண்டில் 7012.8 ஹெக்டர் பயிர் ரூ.637.6 இலட்சம் மதிப்பிலும், 2024-25 ஆம் ஆண்டில் 1737 ஹெக்டர் பயிர் ரூ.29.10 இலட்சம் மதிப்பிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து குறுவை சாகுபடிக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடிக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்டு குறுவை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு