நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில், நேற்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் இருந்த 8 கிராம் தங்க திருமாங்கல்யத்தை திருடிச் சென்றார். பூஜைக்காக வந்த அர்ச்சகர் திருமாங்கல்யம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்போது மர்மநபர் திருடிச்செல்லும் ஆலய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.