நாகை: முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கிய பாஜகவினர்

தமிழக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது 40-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பாஜக சார்பில் திருமருகல் வரதராஜபுரத்தில் உள்ள ஆறுதலின் இல்லம் முதியோர் இல்லம் மற்றும் திட்டச்சேரி ஆற்றங்கரை தெருவில் உள்ள முதியோர் இல்லங்களில் பாஜக முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் ஒன்றிய செயலாளர் எழில்மாறன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செழியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார். முன்னதாக ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி