அந்த வகையில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன்பு நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் பாஜகவினர் முற்றுகையிட்டு மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி படங்களை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தடையை மீறி பாஜகவினர் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பாஜகவினரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்