நாகை நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கம், அரசாணை இன்றி பல கோடி ரூபாய் ரெக்கவரி என்ற பெயரில் வசூல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது. அச்சங்கத்தின் தலைவர் என்.பி. பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிந்த 30 பட்டியல் எழுத்தர்கள், 100 உதவியாளர்கள், 182 வாட்ச்மேன்களிடம் பல ஆண்டுகளாக அபராதம், ரெக்கவரி என்ற பெயரில் பல கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை எந்த வங்கியில் செலுத்தப்படுகிறது, யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை. ரெக்கவரி தொகையை ஊழியர்கள் தலையில் வைத்து அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி