நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் குறுவை பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் 3000 ஏக்கரில் தாளடி சாகுபடியை மேற்கொண்டனர். மேட்டூரில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால், கருகும் பயிர்களைக் காப்பாற்ற டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். வயல்வெளிகளை ஒட்டிய நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால், பிப்ரவரி இறுதி வரை மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி சிந்தாமணி வயல்வெளியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.