இதைதொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோவை வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்று சோதனை செய்தனர். சோதனையில் 32 மூட்டைகளில் தலா 30 கிலோ வீதம் 960 கிலோ ஹான்ஸ், 200 கிலோ கூலீப், 100 கிலோ விமல் பாக்கு என மொத்தம் 92 மூட்டைகளில் மொத்தம் ஆயிரத்து 280 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். மினி லோரி ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் முப்பயத்தங்குடியை சேர்ந்த அந்தோணிராஜ் (36), விழிதியூரைச் சேர்ந்த ராஜ்குமார் (50), நிரவியை சேர்ந்த ஹரிஹரன் (25) என்பதும் தெரியவந்தது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி