ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏ. டி. எம் மகளிர் கல்லூரி, வெளிப்பாளையம் ஜெ. ஜெயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்டவர் நர்சிங் கல்லூரி, வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி என 4 தேர்வு மையங்களில் 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1627 நபர்கள் தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 1242 நபர்கள் தேர்வு எழுதினர். 385 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வு சிறப்பாக நடைபெற 4 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 2 இயக்கக்குழு அலுவலர்களும், 8 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும் மற்றும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதி ஒவ்வொரு மையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தனித்தனியாக பாதுகாப்புப் பணியில் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு வருகை தரும் ஏதுவாக எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.