நாம் தமிழர் கட்சி இன்று (பிப்., 21) திருச்சியில் நடைபெறும் மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறது. கடந்த 2024 மக்களவை தேர்தலில் 8.2% வாக்குகள் பெற்று நாதக தேர்தல் ஆணையத்தால் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி இரட்டை இலக்கத்தில் வாக்குகள் பெறும் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கணித்துள்ளார். சீமான் உள்ளிட்ட சில வேட்பாளர்கள் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
நன்றி: Pttv