திருப்பூர் மாவட்டம் அவிநாசி நீதிமன்ற வளாகத்தில், குப்பைகளை எரிக்கும்போது திடீரென மர்ம பொருள் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு குவிந்திருந்த குப்பைகளை எரிக்கும்போது பெரிய சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் ஓடினர். மேலும் அருகே இருந்த கடைகளில் இருந்த பொருட்கள் சரிந்து விழுந்துள்ளன. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: பாலிமர்