கள்ளக்குறிச்சியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதாக அச்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பு.மாம்பாக்கம் கிராமத்தில், விவசாயி எழில் ராஜா என்பவரது வீட்டு சிசிடிவி கேமராவில் இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஒன்று நடமாடும் காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரும்புத் தோட்டம் அருகே உள்ள அந்த வீட்டில், கோழிக்கூண்டை மோப்பம் பிடித்தபடி அந்த விலங்கு சுற்றித் திரிந்துள்ளது. வந்தது சிறுத்தையா அல்லது காட்டுப்பூனையா எனத் தெரியாததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி