மியான்மரின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள யு மின் ஆங் ஹிலெய்ங், இருநாடுகளின் வரலாற்று மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று (மே 30) இந்தியா வந்தார். பீகாரின் கயாவிலுள்ள மகாபோதி ஆலயத்தில் தரிசனம் செய்த அவர், தொடர்ந்து டெல்லி சென்றடைந்து நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து, ஜூன் 2-ம் தேதி மும்பை செல்லும் அவர் முன்னணி தொழில்துறை தலைவர்களுடனும் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.