"என் மாமா எஸ்.ஐ தான்".. போதையில் போலீசுடன் இளைஞர் வாக்குவாதம்

சென்னை குரோம்பேட்டை அருகே போதையில், பைக்கில் சென்ற இளைஞர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுபோதையில் பைக்கில் சென்ற இளைஞர், ஆட்டோ மீது மோதிவிட்டு, ஓட்டுநருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆட்டோ ஓட்டுநரின் செல்போனையும் உடைத்துள்ளார். தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், இளைஞரை பிடித்தவுடன், தனது மாமா எஸ்.ஐ என கூறி, போலீசார் முன்னிலையில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி