அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் 'மை டியர் சிஸ்டர்'

நடிகர் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிப்பில் பிரபு ஜெயராஜ் இயக்கும் புதிய படத்திற்கு 'மை டியர் சிஸ்டர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அருள்நிதிக்கு அக்காவாக நடிப்பதாக மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். இது ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை சொல்லும் கதை என்றும், தான் டக்கர் வண்டி ஓட்டும் டிரைவராக நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சினிமா துறையில் இது தனது 20-வது வருடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் புரோமோ டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி