தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வரும் 23ஆம் தேதி கூட்டணி கட்சிகள் உடன் தங்களின் பேச்சுவார்த்தையை திமுக தலைமை தொடங்கவுள்ளது. முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக உடன் கடந்த கால் நூற்றாண்டாக கூட்டணியில் இருக்கும் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திகழ்கிறது. எனவே இந்த கட்சி உடன் தான் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கும்.