திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஜம்புநாதபுரத்தில் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது கார் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஒரே விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: சன்நியூஸ்