திருப்பூர் மாவட்டத்தில் நியூஸ் 7 சேனல் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் செய்தியாளர் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தன்னை சிலர் பின் தொடர்ந்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசிடம் அவர் பேசிய கடைசி ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: Puthiya Thalaimurai