18 வருடங்களுக்குப் பிறகு கொலை குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி

டெல்லியின் நங்லோய் பகுதியில் 2004-ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிக்கந்தர் (60) மற்றும் அவரது மனைவி மஞ்சு (55) ஆகியோரை 18 வருடங்களுக்குப் பிறகு டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். கூலி வேலை செய்து வந்த இருவரும், போலீஸாரிடம் சிக்காமல் தப்பிக்க ஊர் ஊராகச் சென்றுள்ளனர். இதனால், 2006-ம் ஆண்டு இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி