சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் ஆகிய அணிகள் மோதும் IPL 2025 3வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல் பேட்டிங் செய்து வரும் மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா (0), ரியான் ரிக்கல்டன் (13) ரன்கள் எடுத்து கலீல் அகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். வில் ஜேக்ஸ் (11) அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 7 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.